• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரானது – முத்தரசன்

July 29, 2020 தண்டோரா குழு

சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை சிரியன் சர்ச் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கொரோனா தொற்று விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்தளவு பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது.ஊரடங்கு நீடிக்கப்பட்டால் பாதிக்கப்படும் மக்களை பற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு கவலையில்லை. மத்திய அரசு இதுவரை ஒரு பைசா கூட மக்களுக்கு தரவில்லை.ஊரடங்கினால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திற்கு மாநில அரசு 5 ஆயிரம் ரூபாயும்,புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு 7 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.கொரோனா நெருக்கடி சூழலை பயன்படுத்தி எதேச்சை அதிகாரம் கொண்ட அவசர சட்டங்களை மக்களுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. மனு தர்ம கொள்கையை அமல்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. மின்சார வரைவு மசோதாவினை ஏற்க மாட்டோம் என தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் சுற்றுச்சூழல் அவசர சட்டம் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எதிரானது. மத்திய அரசின் தவறான திட்டங்கள் தொடர்பாக ஜனநாயக ரீதியாக கருத்துகள் சொல்ல முடியவில்லை. கருத்து சொல்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் பாலன் இல்லம் மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணு இழிவான விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆயிரக்கணக்கில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார். பெரியார் சிலை அவமதிப்பு மற்றும் கட்சி அலுவலகம் மற்றும் தலைவர்கள் மீதான இழிவான விமர்சனம் தொடர்பாக அதிமுக கட்சி மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தப்படுகிறது எனவும், இந்தியாவில் சர்வதிகார பாசிச ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு அதிமுக அரசு துணை போகிறது எனவும் முத்தரசன் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க