July 28, 2020
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு உள்ள அனைத்து செல்போன் கடைகளையும் நாளை முதல் 5 நாட்களுக்கு அடைக்க செல்போன் வியாபாரிகள் சங்கம் செய்துள்ளது.
கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்கிடையில், கோவையில் கோவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஒத்துழைப்பு வழங்கும் விதமாக மாநகராட்சி அதிகாரிகள் செல்போன் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினர்.
இதையடுத்து, நாளை 29.7.20 புதன்கிழமை முதல் 2.8.20 ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்களுக்கு காந்திபுரம் X-Cut ரோடு 1 முதல் 10 ஆம் தேதி வரை கிராஸ் கட் ரோட்டில் உள்ள அனைத்து கடைகளையும் மூட காவல்துறை, மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை முதல் ,கோவை காந்திபுரம் பகுதிகளில் உள்ள அனைத்து மொபைல் விற்பணையாளர் கடைகளும் 5நாட்கள் ஞாயிறு வரை அடைக்கப்படும். என்று கோவை செல்போன் வியாபாரிகள் மற்றும் பழுது நீக்கும் சங்கங்கள் அறிவித்துள்ளது.