July 28, 2020
தண்டோரா குழு
மகாராஷ்டிராவில் இருந்து கோவைக்கு போலி இ – பாஸ் மூலம் நள்ளிரவில் வரும் சொகுசு பேருந்துகளால் கோவையில் கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகை செய்கிறது.
கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மாநில,மாவட்ட எல்லைகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இரவு,பகலாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டாலும், நள்ளிரவில் மட்டும் சொகுசு பேருந்துகள் ஓடுவது அதிகமாகிறது. இதனை தொடர்ந்து நேற்றய தினம் மஹாராஷ்டிராவில் இருந்து 25 பயணிகளுடன் கோவையின் எல்லையை நுழைந்தது. பயணிகள் கோவை இறங்கிய போது அவர்களின் இ பாஸை வாங்கி படித்த போது மகாராஷ்டிரா முதல் மதுரை வரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால் இங்குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமலும்,கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபடாமலும் கோவை நீலம்பூர் பகுதியில் பயணிகள் இறங்கி மாநகர பகுதிக்குள் நுழைந்தன.
இதே போல் தினந்தோறும் கோவை மாவட்டத்தில் சொகுசு பேருந்துகள் போலி இ பாஸ் மூலம் நுழைந்து கொரோனா தொற்றை அதிகரிக்க செய்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டு கோவை மக்களை காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். மேலும் பல மாநில எல்லைகளை கடந்து சொகுசுப்பேருந்து எப்படி கோவை வந்தது ? போலி இ – பாஸ் பெற்றது எப்படி ? என்று கேள்விக்குறியாகவே உள்ளது.