July 27, 2020
தண்டோரா குழு
கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் குளிா்ச்சியான காலநிலை நிலவுகிறது.
கேரளத்தில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. தமிழகத்தில் குறிப்பாக கோவை உள்பட மேற்குத்தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது.
இதற்கிடையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், ஜி.என் மில்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மாநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், டவுன் ஹால், உக்கடம், பந்தய சாலை, குனியமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் கோவை மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.