July 27, 2020
தண்டோரா குழு
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையைப் போல இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும் ஜோதிடர் அணியின் மாநில தலைவருமான பிரசன்னா சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இலவச கல்வி அளித்து, ஊக்கத்தொகை அந்த மாணவர்களுக்கு வழங்கப்படுவதை போல இந்து மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எல்லாம் இலவசமாக வழங்க வேண்டும். ஒன்றாம் வகுப்பிலிருந்து காலேஜ் வரைக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழலில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்து வருகின்றனர் இதனை தடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சர் என இருவருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம் என்றார்.