• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜாதி மோதல்களை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

July 22, 2020 தண்டோரா குழு

கோவையில் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில பொது செயலாளர் தேவராஜ், பொருளாளர் பழனிச்சாமி மற்றும் கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் பார்த்திபன் மற்றும் நான்கு திசை வேளாளக் கவுண்டர்கள் ஆகியோர் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் அண்மையில் வேளாளர் என்ற பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்குவதிற்கு தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் மற்றும் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் பல்வேறு பகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சுவரொட்டி ஒட்டியிருந்தனர், இந்நிலையில் ஒட்டியிருந்த சுவரொட்டியின் மீது ஜாதி மோதல்களை உருவாக்கும் விதமாக மாநில தலைமையும் மற்றும் கொங்கு வேளாள கவுண்டர் சமூக தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. மர்ம நபர்களால் இது போன்று செயல்கள் செய்யப்படுவதால் தமிழகத்தில் பொது அமைதியும்,சட்ட ஒழுங்கும் சீர்கெட வாய்ப்புள்ளதால் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த ஜாதி பிரச்சனையை அரசாங்கம் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க