July 20, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் சோமனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு இன்று கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து தொடர்ந்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.
கிருமி நாசினியினை கொண்டு மருத்துவமனை முழுவதும் தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை சோமனூர் பகுதியில் இன்று ஒரே நாளில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் இருவர்,மற்றவர்கள் மூவர் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.