July 20, 2020
தண்டோரா குழு
கோவையில் எச்.ராஜா மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு – இந்து கோவில்கள் தாக்குதல் அவமதிப்பு சம்பவத்தில் உண்மைக்கு புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 கோவில்களில் தீவைத்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைத்து சிசிடிவி காட்சிகள் கொண்டும் நேற்று போலிசார் சேலத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை கைது செய்தனர். இந்தநிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்
பெரியார் திராவிட கழகத்தை சார்ந்தவர்கள் என ட்வீட்டர் மூலமாக உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தனர்.
மேலும் திடமிட்டு இருவேறு பிரிவினருடன் கலகத்தை ஏற்படுத்தல், பொது மக்களிடம் அவதூறு பரப்பு செயலில் ஈடுப்பட்ட சட்டபிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் கோவில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட கஜேந்திரன் என்பவர் எந்த அமைப்பும் , எந்த கட்சியை சேர்ந்தவர் அல்ல போலிசார் விசாரணை நடத்தியதில் அறிவிப்பை காவல்துறையினர் நேற்று வெளியிட்டனர்.