July 20, 2020
தண்டோரா குழு
கோவைக்கு இஸ்லாமிய பயங்கரவாதம், தனி தமிழ் நக்சல் இயக்கங்கள் ஆகிய இரண்டு ஆபத்துகள் இருக்கின்றன என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை காந்திபுரம் பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோவையில் கடந்த காலத்தில் நடந்த கொடூரம் மீண்டும் நடைபெறுவதை இந்த அறிகுறிகள் காட்டுகின்றது.கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மெத்தன போக்குடன் செயல்படுகின்றது.இது கண்டனத்திற்குரியது. கோவில் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினரை சுதந்திரமாக இந்த அரசு செயல்பட வில்லை.3 இடங்களில் கோவில்களில் அம்மன் சேலை எரிக்கப்பட்டுள்ளது.இந்த செயல்களை மனநிலை பாதிக்கபட்டவர் செய்தார் என கூறுவது ஏற்கும்படி இல்லை.திமுக கடந்த காலங்களில் செய்த அதே தவறை அதிமுகவும் செய்கின்றது.
இந்துக்களுக்கு எதிரான செயல்களை திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை. கோவைக்கு இஸ்லாமிய பயங்கரவாதம், தனி தமிழ் நக்சல் இயக்கங்கள் ஆகிய இரண்டு ஆபத்துகள் இருக்கின்றன. இதை முளையிலேயே கிள்ளி எறிய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பா.ஜ.க நிர்வாகிகள் வீடுகள் முதலான இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை இது வரை கண்டுபிடிக்கப்பட வில்லை.நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்க கூடாது.மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை நாட பா.ஜ.க தயங்காது.பா.ஜ.க தேர்தலை பற்றி கவலைப்படாது. முதல் சிந்தனை மக்களின் பாதுகாப்பும், உயிர் உத்திரவாதம் இருப்பதும்தான். 4 இடங்களில் கோவில்கள்களை தாக்கியது மனநிலை பாதிக்கப்பட்டவர் என காவல் துறை சொல்வது ஏற்கும் படியாக இல்லை.இது புனைக்கப்பட்ட கதையாக இருக்கின்றது. ஏவி விட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.முருகன் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அமைதி காப்பதால், திராவிட இயக்கங்களுக்கு எதிராக மக்கள் திரள வேண்டிய சூழல் இருக்கின்றது.
கோவில்கள் தாக்கப்படுவதை ஸ்டாலின் கண்டிக்கின்றார் என்றால் இந்துகளின் ஓட்டின் முக்கியத்துவம் தெரிந்துள்ளார்.இந்த விவகாரத்தில் அதிமுக விழித்துக்கொள்ள வில்லை என்றால் மிகப்பெரிய தோல்வியை தழுவும்.காவல் துறையை முதல்வர் சுதந்திரமாக இருக்க விடுவதில்லை.கோவில் தாக்கப்பட்டதை கண்டிக்கும் ஸ்டாலினின் மனநிலை உண்மையானதா என்பதை அறிய காத்திருக்கின்றோம். தமிழக அரசுக்கு இன்று முதல் எச்சரிக்கை விடுத்துள்ளோம். மாநில அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் மத்திய அரசு மூலம் மாநில அரசை நிர்பந்திப்போம். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டிலும் , நடுநிலையோடு வெளிப்படையான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
கருப்பர் கூட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்கியது வெட்ககோடானது.ஒரு இடத்தில் இருந்த காட்சிகளை மட்டும் வைத்து காவல் துறை முடிவெடுத்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்க இருக்கின்றோம்.
இவ்வாறு அவர் பேசினார்.