July 18, 2020
தண்டோரா குழு
நடிகர் அஜித் வீட்டிற்கு மர்ம நபர்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் அஜித் குமார்.இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில்,இன்று மதியம் காவல் காட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இணைப்பு துண்டித்தார்.
இதையடுத்து,சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு சென்ற போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்தனர். விசாரணையில் இது புரளி என தெரியவந்தது.