July 18, 2020
தண்டோரா குழு
கோவை பேரூர் எம் ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் ஐஸ்வர்யா, பேரூர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு மாணவி படித்து வருகின்ற மாணவி. இவரை அதே பகுதியை சேர்ந்த ரதீஸ் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவ் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர இருவரும் கண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக தன் வீட்டு கண்டிப்பின் காரணமாக ஐஸ்வர்யா ரதீஸுடன் பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்ற ரதீஸ், தன்னை மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.இதற்கு மாணவி மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியால் ஐஸ்வர்யாவை குத்தியதாக சொல்லப்படுகிறது. வயிற்று நெஞ்சு உள்ளிட்ட நான்கு இடத்தில் கத்தியால் ரதீஸ் குத்த,அலறலைக் கேட்டு தடுக்க வந்த தந்தைக்கும் இரு கைகளில் கத்திக்குத்து விழுந்தது.படுகாயமடைந்த இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி, ஐஸ்வர்யா இன்று இறந்தார். தலைமறைவான இளைஞரை கோவை பேரூர் போலிஸார் தேடி வருகின்றனர்.