July 18, 2020
தண்டோரா குழு
கோவை ஐந்து முக்கு எனும் இடத்தில் உள்ள மாகாளியம்மன் கோவில் வாசலில் தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மாகாளியம்மன் கோயில். இக்கோவில் மீது தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ வைத்து சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.கோயில் வாசலில் உள்ள வேல், கட்ட கூறை தீ புகையால் கருப்பாக காணப்படுகின்றது.நள்ளிரவு அல்லது அதிகாலை நடந்திருக்க கூடும் என்ற நிலையிலே இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டு அடங்கும் முன் கோயில் முகப்பில் தீ வைக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.சம்பவ இடததில் உக்கடம் போலிசார் விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.