• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் பல்கலை.,யில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கை

July 17, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பத்து இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான 2020-2021 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் (2020) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என்று முனைவர் மா.கல்யாணசுந்தரம், முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) தெரிவித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நீ. குமார் அவர்கள் இணையதள மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வினை ஆகஸ்ட் மாதம் (2020) முதல் வாரத்தில் தொடங்கி வைப்பார். இளங்கலை பாடப்பிரிவுகளான, இளமறிவியல் (மேதமை)வேளாண்மை, இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை, இளமறிவியல் (மேதமை) வனவியல், இளமறிவியல் (மேதமை) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், இளம் தொழில் நுட்பம் (வேளாண் பொறியியல்),இளமறிவியல் (மேதமை) பட்டுவளர்ப்பு, இளம் தொழில் நுட்பம் (உணவுதொழில் நுட்பம்), இளம் தொழில் நுட்பம் (உயிரித் தொழில்நுட்பம்), இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச் சுழல் பொறியியல்) மற்றும் இளமறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார்.

உறுப்புக் கல்லூரிகளில் ஆயிரத்து அறுநூறு (1,600) இடங்களுக்கும், இணைப்புக்கல்லூரிகளில் மூவாயிரத்து நூறு (3,100) இடங்களுக்கும் இணையதளம் வாயிலாக 2020-2021 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2020-2021 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு மற்றும் விண்ணப்பத்தினை நிரப்புதல் தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்தல், கல்லூரியில் சேருவதற்கான இடைக்கால அனுமதி வழங்குதல் ஆகிய அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம், தேவையான விபரங்கள் மற்றும் விண்ணப்பக்கட்டணத்தை www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் மாதம் (2020) முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யலாம். மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்து கொள்ள www.tnauonline.in இணைய தளத்தில் உள்ள தகவல் கையேடு உதவிகரமாக இருக்கும். மேலும் தெளிவுபெற 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவிச் சேவை எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கபபடும் என்றும் முதன்மையர் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று நோய் பரவல் அதிகமுள்ள இந்த காலகட்டத்தில், மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களுக்காக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு, நேரில் வருவதை தவிர்த்து, தொலைபேசி உதவிச் சேவை எண்களை பயன்படுத்துமாறும் கேட்டுக்கோண்டார்.

மேலும் படிக்க