July 17, 2020
தண்டோரா குழு
கோவை ஒண்டிபுதூர் அருகே ஆவின் பாலகத்தின் கல்லாப்பெட்டியை இளைஞர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒண்டிபுதூர் திருச்சி சாலையில் 24 மணி நேரம் செயல்படும் ஆவின் பாலகம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று இரவு பணியில் தேவதாஸ் என்ற 70 வயது முதியவர் இருந்துள்ளார்.இந்நிலையில், வாடிக்கையாளர்கள் யாரும் வராததின் காரணமாக சிறிது நேரம் கண் அயர்ந்துள்ளார். அப்போது,அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் முதியவர் அயர்ந்து தூங்குவதைக் கண்டு, கடையின் உள்ளே நுழைந்து கல்லாபெட்டியில் இருந்த 4000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை பணம் காணாமல் போனது தெரியவர பாலகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட போது, ஹெல்மெட் அணிந்தபடி உள்ளே லாவகமாக வந்து கல்லாப் பெட்டியை எடுத்துச் சென்றது கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.பின்னர் இதுகுறித்து கடையின் உரிமையாளர் கோபால கிருஷ்ணன்,கல்லாப்பெட்டியில் சுமார் 4,000 ரூபாய் வரை இருந்ததாக கூறி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.