• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரபடுமா? – அமைச்சர் எஸ்.பி வேலுமணி விளக்கம்

July 16, 2020 தண்டோரா குழு

கோவையில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுபாட்டில் இருக்கிறது. தடுப்பு பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். கொரோனா அறிகுறியை கண்டறிந்து சிகிச்சை அளிக்க மாவட்டத்தில் 5 ஆயிரம் காய்ச்சல் முகாம் நடத்தபட்டு வருகிறது. முதல்வரின் அறிவுரை படி கோவையில் கொரொனாவால் பாதிக்கப்படுவோருக்கு சித்த மருத்துவ சிகிச்சை முறை தொடங்கபட்டுள்ளது. யோகா மற்றும் மன அழுத்த குறைக்க கூடிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கோவையில் இதுவரை 80,620 பேருக்கு சோதனை செய்யபட்டுள்ளது. மொத்தம் 4813 படுக்கை வசதிகள் செய்யபட்டுள்ளது. கொரோனா குறித்த தகவல்களை அறிந்துகொள்ள கோவை கேர் என்ற செயலி தொடங்கபட்டுள்ளது.

மனித கழிவுகளை மனிதனே அகற்றுதல் தடுப்பு சட்டம் கோவை மாவட்டத்தில் 100 சதவிதம் அமல்படுத்தபட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 34 நகரங்களில் கழிவு நீர் அகற்றும் அதி நவீன எந்திரம் வழங்கபடும். கோவையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுபடுத்த புதிய நபர்கள் வருகை குறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். மாஸ்க் அணியாதோரிடம் பேச கூடாது. கொரோனா யாருக்கு வேண்டுமானாலும் வரும்.கொரோனவால் பாதிக்கபட்டோரை உதாசினம் செய்ய கூடாது என்றார்.

மேலும், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு கொண்டுவரபடுமா என செய்தியாளர் கேட்டதற்கு ஊரடங்கால் தொழில்கள் பாதிக்கும் என்றும் கோவையில் ஊரடங்கு கொண்டுவர தேவையில்லை என்றார். மேலும், மருத்துவ குழுவினரின் பரிந்துரை படி தான் ஊரடங்கை கொண்டு வர முடியும் என்ற கூறிய எஸ்.பி.வேலுமணி பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

மேலும் படிக்க