• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

July 16, 2020 தண்டோரா குழு

கோவையில் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொங்கு மக்கள் முன்னனியினர் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் பார்த்திபன் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக்கழகத்தின் மாநில ஊடக பிரிவு ‘பிரபு’ தலைமையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் அண்மையில் வேளாளர் என்ற பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்குவதிற்கு ஆதரவு தெரிவித்த தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் மற்றும் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோரை கண்டித்து பேரூர்,காளம்பாளையம் என சில பகுதிகளில் சுவரொட்டி ஒட்டியிருந்தாகவும்,இந்நிலையில் நாங்கள் ஒட்டியிருந்த சுவரொட்டியின் மீது ஜாதி மோதல்களை உருவாக்கும் விதமாக எங்களது மாநில தலைமையும் மற்றும் கொங்கு வேளாள கவுண்டர் சமூக தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.மர்ம நபர்களால் இது போன்று செயல்கள் செய்யப்படுவதால் தமிழகத்தில் பொது அமைதியும்,சட்ட ஒழுங்கும் சீர்கெட வாய்ப்புள்ளதால் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க