• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம்

July 16, 2020 தண்டோரா குழு

கோவையில்எஸ்.எல்.சி – பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது.

கோவையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.எஸ்எஸ்எல்சி மாணவ மாணவிகளுக்கு தனியாகவும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு தனியாகவும் வரவழைக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவ மாணவிகளுக்கு வழங்கும் வகையில் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். புத்தகங்கள் வாங்க வந்திருந்த அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நின்றிருந்தனர்.சக மாணவ மாணவிகளை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

புத்தகங்களை வாங்கிய பின்னர் அவர்கள் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.நேற்று ஒரே நாளில் மற்றும் எஸ்எஸ்எல்சி மாணவ மாணவிகள் 75 சதவீதம் பேருக்கும் பிளஸ் டூ 55 சதவீத பேரும் புத்தகங்கள் விநியோகம் செய்யப் பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க