July 15, 2020
தண்டோரா குழு
உலர் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு அந்தந்த பள்ளிச் சத்துணவு மையங்களில் வழங்கப்படும் கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின்க கீழ் உணவு உண்ணும் பயனாளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, உலர் உணவுப் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு அந்தந்த பள்ளிச் சத்துணவு மையங்களில் வழங்கப்படும்.
மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மட்டும் 16.07.2020 முதல் 23.07.2020 முடிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக பள்ளி
வேலை நாட்களில் (5 நாட்கள்) முகக்கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளியை பின்பற்றியும் அவர்களது குழந்தைகள் பயிலும் பள்ளிக்குச் சென்று உலர் உணவுப்பொருட்களான அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கூறியுள்ளது.