July 15, 2020
தண்டோரா குழு
ஆல் இண்டியா சீனியர் ஸ்கூல் சர்டிபிகேட் தேர்வு (ஏஐஎஸ்எஸ்சிஇ) முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வை எழுதிய கோவை கேம்போர்டு இன்டர்நேசனல் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவர் எஸ்.கவிஷ்குமார் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் எம்.எஸ்.சர்வேஷ் 96.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் எஸ்.கே.சரித்ரா 95.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் வென்றுள்ளனர்.
சாதனை மாணவர்களையும் அதற்காக உழைத்த ஆசிரியர்களையும் கேம்போர்டு இன்டர்நேசனல் பள்ளி சேர்மன் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர் பூனம் சையல் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.