• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 14, 2020 தண்டோரா குழு

கோவையில் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையலடைத்தனர்.

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் பேப்ரிகேஷன் பணி செய்து வருகிறார்.அவர் அடிக்கடி கிரிகெட் விளையாட்டிற்காக அந்த பகுதியலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு செல்வது வழக்கம்.அப்போது அதே பகுதியில் வசித்து வரும் சிறுமிக்கும் மணிக்கண்டனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அந்த சிறுமியை தனது நண்பரின் வீட்டிற்கு கடத்தி சென்றுள்ளார். இதனிடையே தங்களது மகளை காணாதாதல் அதிர்ச்சிக்குள்ளான, சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக போத்தனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த வழக்கு கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, போலீசார் மணிகண்டனை கைது செய்ததுடன் சிறுமியை பத்திரமாக மீட்டனர்.மேலும் மணிகண்டன் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மேலும் படிக்க