July 14, 2020
தண்டோரா குழு
கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை மற்றும் மதுரை மண்டல வருமான வரித்துறை ஆணையராக இருந்து வருபவர் ராஜீவ் விஜய்நபார். இவர் சமீபத்தில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அலுவலக பணிகளை மேற்கொண்டார். மேலும் கடந்த வியாழக்கிழமை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16 அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில்,வெள்ளிக்கிழமை அவரது உடல் நிலை பாதிக்கப்படவே பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதே மருத்துவமனையில் அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து,ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 வருமான வரித்துறை அதிகாரிகளையும் தனிமைபடுத்தி கொள்ளுமாறு சுகாதாரதுறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில்,வருமான வரித்துறை ஆணையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து,39 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.