July 14, 2020
தண்டோரா குழு
கோவையில் விநாயகர் சிலை காணாமல் போனதாக இந்து முன்னணி கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை சாய்பாபாகாலனி ஜீவா நகர் பகுதியில் அரசமர விநாயகர் கோவிலானது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த விநாயகர் சிலை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்றைய தினம் கோவில் பூசாரி விநாயகர் சிலைக்கு பூஜை செய்வதற்காக அதிகாலை சென்றபோது சிலை காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் தனபால் தலைமையில் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது .
அதில் கூறப்பட்டுள்ளதாவது
சிலை சம்பந்தமாக வழக்கு இருந்து வந்த நிலையில் தற்போது இந்த விநாயகர் சிலையை காணாமல் போனதால் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலையைக் கண்டுபிடித்து தருமாறும்,சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர்.