July 14, 2020
தண்டோரா குழு
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அதிவிரைவுப்படை வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.வெள்ளலூர் பகுதியில் அதிவிரைவு படை குடியிருப்பு பகுதியில் சுமார் 1500 மேற்பட்டோர் குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.
இந்நிலையில்,வேலூர்,விருதுநகர், மகாராஷ்டிரா பகுதிகளுக்கு சென்று வந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மூவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் கடந்த 9ம் தேதி ஊருக்கு சென்று பணிக்கு திரும்பிய நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.