July 13, 2020
தண்டோரா குழு
கோவை துடியலூர் காவல் நிலையத்தில் மேலும் 2 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு துடியலூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த 31 காவலர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 5 பேருக்கு நேற்று காலை கொரானா தொற்று உறுதியானது. இதையடுத்து துடியலூர் காவல் நிலையம் மூடப்பட்டு தற்காலிகமாக காவல் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில்,இன்று இதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த மேலும் 2 காவலர்களுக்கு இன்று கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,அவர்கள் சிகிச்சைக்காக.இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது அங்கு பணியாற்றி வரும் காவலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.