July 13, 2020
தண்டோரா குழு
ரயில்வேவை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் அராஜக போக்க கண்டித்து எஸ் ஆர் எம் யூ மற்றும் ஏ ஐ ஆர் எப் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே பி எஸ் என் எல் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம் வழங்காததால் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஒய்வு பெற்று விட்டனர். இதே போல நஷ்டத்தில் இயங்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், காப்பீட்டு திட்டம் மற்றும் ரயில்வே துறையை தனியார் மயமாக்க நடவடிக்கையை மத்திய அரசு வருகிறது.
இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் எஸ் ஆர் எம் யூ, ஏ ஐ ஆர் எப் தொழிற்சங்கத்தினர் இணைந்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 109 வழித்தடங்களில் லாபகரமாக இயங்கும் 151 பயணிகள் ரயிலையும், இரட்டிப்பு லாபாம் தரும் சரக்கு போக்குவரத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் ரயில்வே துறையில் நாளுக்கு நாள் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து வரும் நிலையில் 2 ஆண்டுகளாக நிரப்பப்படாத 50% காலியிடங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட பதவிகளையும் சரண்டர் செய்யக்கூடாது என வலியிறுத்தி முப்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ரயில்வே தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டி வந்தாலும் மத்கிய அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.