July 12, 2020
தண்டோரா குழு
கோவையில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1261 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 1 உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் இதுவரை 321 பேர்
கொரோனா பாதிப்பில் இருந்து
குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 930 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.