July 10, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று கோவை, காந்திபுரம், 100 அடி ரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் 13 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம்,இன்று ஒரே நாளில் 43 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,071 ஆக உயர்ந்தது. இதில். 320 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 744 பேர் இ.எஸ்.ஐ., தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.