July 10, 2020
தண்டோரா குழு
ஆன்லைனில் பாடம் நடத்தினாலும் பெற்றோர்கள் கட்டணம் கட்ட மறுப்பதாகக்கூறி தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நலசங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.
கொரோனா காரணத்தால் பள்ளி திறப்புகள் தள்ளி போவதால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் போதித்து வருகிறது. இந்நிலையில் பள்ளி கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு விதித்த தடை குறித்து நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் மனு அளித்தன. இதனையடுத்து விசாரணையில் பெற்றோர்கள் தாமாக முன்வந்து கல்வி கட்டணத்தை வழங்கும் பட்சத்தில் வாங்க தடையில்லை எனவும் தவணை முறையில் பள்ளி கட்டணம் வசூலிக்கலாமா என்பதற்கு அரசின் அனுமதி பெற அறிவுறுத்தியது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ள 248.76 கோடி ரூபாயை கொண்டு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் பெற்றோர்கள் பாதிக்கப்படாதவாறு மூன்று தவணைகளாக பள்ளி கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. கடந்த மார்ச் முதல் ஜீன் வரையான சம்பளமில்லாமல் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். தமிழக அரசு பள்ளி கட்டணத்தை பெற்றோர்களை செலுத்த ஆணையிடக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நலச்சங்கத்தினர் ஈடுபட்டனர்.