July 10, 2020
தண்டோரா குழு
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 10 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்பழகன் மற்றும் தங்கமணி ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.