July 9, 2020
தண்டோரா குழு
ஊஞ்சலில் விளையாடிய சிறுமி துண்டு கழுத்தில் இறுகி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர்.அருள்ஞான ஜோன்ஸ்-நிஷா.
அருள்ஞான ஜோன்ஸ்வளைகுடா நாட்டில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.தற்போது கொரோனா தொற்று காரணமாக கோவை வந்துள்ளார்.இவரது மனைவி நிஷா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.இவர்களது மகள் ஜெர்லின் மேகா(9)தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள ஊஞ்சலில் சிறுமி விளையாடி வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் வீட்டின் உறங்கி கொண்டு இருந்தனர்.ஊஞ்சலில் உள்ள இரும்பு சங்கிலியில் ஒரு துண்டை கட்டி ஏறி விளையாடிய போது துண்டு சிறுமியின் கழுத்தை சுற்றி இறுகியதில் மரணம் அடைந்துள்ளார். தற்செயலாக சிறுது நேரம் கழித்து வெளியில் வந்த பார்த்த பெற்றோர்கள் மகள் ஊஞ்சலில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து சிறுமியை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறயுள்ளனர்.இதனை கேட்டு பெற்றோர்கள் கதறி அழுதனர்.சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை மருத்துவமனையில் வைக்கபட்டு உள்ளது.ஊஞ்சலில் துண்டு இறுகி சிறுமி இறந்த சம்பவம் அருகில் வாசிப்பவர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.