July 9, 2020
தண்டோரா குழு
கோவை கிராஸ்கட்ரோடு சாலையில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நகைக்கடையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் என்ற பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது.இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து கடைக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில்மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் கடையின் கதவுகள் சாத்தபட்டு உள்ளது. நகைகள் அனைத்தும் பாதுகாப்பு அறைக்கு மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.