July 9, 2020
தண்டோரா குழு
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கருர் மாவட்டத்தை சேர்ந்த 80 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவையில் கொரொனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது.மாவட்டத்தில் தற்போது வரை 927 பேர் வைரஸ் தொற்றால் பாதித்துள்ள நிலையில் 20க்கு மேற்பட்ட பகுதிகள் தனிமைபடுத்தபட்டுள்ளன.அண்மை காலமாக கொரொனா பாதிப்பு என்பது கொத்துக் கொத்தாக ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மேலும் கோவை மாவட்டத்தை பொருத்தவரை 3 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பால்கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் (பிஎஸ்ஜி) மருத்துவமனையில் 18 நாட்களாக சிகிச்சை பெற்ற முதியவர், ஆபத்தான நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் முதியவர் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தகவல் தெரிவித்துள்ளார்.