• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

July 9, 2020 தண்டோரா குழு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோப்பிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது என்றும் தொலைக்காட்சி வழியாகபாடம் நடத்தவே திட்டமிட்டிருக்கிறது.அதற்கு 3 சேனல்கள் இதுவரை ஒப்புதல் தெரிவித்துள்ளது.தற்போது அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் தொடங்கி வைத்த பின் வகுப்புகள் குறித்த முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும் பிளஸ் – 2 தேர்வெழுதாமல் விடுப்பட்ட மாணவர்களுக்கான தேர்வை 718 பேர் எழுத விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மீதமுள்ளவர்களின் நிலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேர்வு எழுதினால் தானே மார்க் போட முடியும். விடுப்பட்ட 34,842 மாணவர்களும் தேர்வெழுத வந்தாலும், தேர்வெழுத ஏற்பாடுகள் செய்து தர அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்

மேலும் படிக்க