July 8, 2020
தண்டோரா குழு
கோவை கொடீசியா கொரோனா சிகிச்சை மையத்தில் திரைப்படங்களை ஒளிபரப்ப திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக கோவை கொடீசியா வளாகத்தில் கொரோனா அறிகுறி இல்லாத & பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காக முதற்கட்டமாக 286 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன.
இந்நிலையில்,அங்கு வரக்கூடிய நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் பொருட்டு, பொழுதுபோக்கு திரைப்படங்களை ஒளிபரப்ப திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.