July 8, 2020
தண்டோரா குழு
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வழிகாட்டுதலின்படி கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை 09.07.2020 அன்று காலை 10.00 மணியளவில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மண்டலத்திற்குட்பட்ட பீளமேடு, ஆவாரம்பாளையம் ரோடு, விளாங்குறிச்சி புதுகாலனி, நீலிக்கோணாம்பாளையம், எம்.வி.கே.வீதி, தட்சன் தோட்டம், கணபதி மாநகர், வ.உ.சி.நகர், கணபதி, காமராஜபுரம், துடியலூர் டி.என்.பி.நகர் ஆகிய இடங்களிலும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மண்டலத்திற்குட்பட்ட தெலுங்குபாளையம், கற்பகம் கார்டன், செல்வபுரம் திருநகர், குனியமுத்தூர் அய்யப்பன் கோயில் வீதி, போத்தனூர் குறிச்சி பிரிவு, தொண்டாமுத்தூர் பாய் நகர் ஆகிய இடங்களிலும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மண்டலத்திற்குட்பட்ட ராம்குர்பாய் அம்மாள் டி.பி.ரோடு ஆர்.எஸ்.புரம், மீனாட்சி ஹோம், ராஜ்நகர், கே.கே.புதூர், கலாமன்றம், கவுண்டம்பாளையம் தேவாங்க நகர், சீரநாயக்கன்பாளையம் கோகுலம் காலனி, கல்வீராம்பாளையம் மருதபுரம், வடவள்ளி பெரிய தோட்டகாலனி ஆகிய இடங்களிலும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிங்காநல்லூர் கிருஷ்ணம்ம நாயுடு வீதி, நஞ்சுண்டாபுரம் பெரியார் நகர், சௌரிபாளையம் ஹவுசிங் யூனிட், உப்பிலிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி, இராமநாதபுரம் காரமராஜர் ரோடு ஆகிய இடங்களிலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மண்டலத்திற்குட்பட்ட சீதாலட்சுமி அனுப்பர்பாளையம், பட்டுநூல் இடையர்வ வீ, ஜெயில் ரோடு விஜி ராவ் நகர், கணபதி, இரத்தினபுரி செக்கன் தோட்டம், இராஜவீதி அல் அமீன் காலனி, சி.டி.எம் ஹோம் தனலட்சுமி நகர், வாலாபாய் வந்தீராவன் ( VGM Home) சி.எம்.சி.காலனி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இம்முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் அந்தந்த பகுதி பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. இம்முகாமில் தொடர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இருதய நோயாளிகள், நுரைய ஈரல், சர்க்கரை வியாதி, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் தொற்று அறிகுறி உள்ளவர்கள் என பல கட்டங்களில் பல்ஸ் மீட்டர் மற்றும் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. மேற்கண்ட அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த பரிசோதனை முகாமில் கலந்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
மேற்கண்ட இடங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்தி நோய்த் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களுக்கு க கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்
1077, 0422 1077, 0422 1077, 0422-2302323, 2302323, 2302323, 9750554321