• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.1.69 லட்சத்தில் மாற்று திறனாளிகளுக்கு வாகனம் வழங்கிய கோவை எம்.பி !

July 8, 2020 தண்டோரா குழு

கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்று திறனாளிகள் மூவருக்கு ரூ 1.69 லட்சத்தில் மூன்று சக்கர வாகனத்தை இன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார்.

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார். கொரோனா பேரிடர் காலத்தில்கூட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது, சுகாதார ஊழியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவது என தொடர்ந்து இயங்கி வருகிறார். மேலும் தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்.

இதன்ஒருபகுதியாக 2020க்கான நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 8 மாற்று திறனாளிகளுக்கு வழங்க மூன்று சக்கர வாகனத்திற்கான நிதி ஒதுக்கீட்டை செய்திருந்தார். இதன்தொடர்ச்சியாக புதனன்று மூன்று மாற்று திறனாளிகளுக்கு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான வாகனம் வழங்கப்பட்டது. கோவை காந்திபுரம் 2 ஆவது வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் பி.ஆர்.நடராஜன் எம்பி பங்கேற்று பயணாளிகளான சிங்காநல்லூர் கள்ளிமடையை சேர்ந்த பாலன்,சூலூர் தாலுகாவிற்குட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு, பெரியகுயிலை சேர்ந்த தங்கவேல் ஆகியோருக்கு வாகனத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக இந்நிகழ்வில் மாற்று திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். வாகனத்தை பெற்றுக்கொண்ட பயணாளிகள் பி.ஆர்.நடராஜன் எம்பிக்கு மனநெகிழ்வோடு நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க