July 7, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து நாள்தோறும் கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் ஏற்றிச் செல்கின்றன. இந்த வாகனங்கள் முழுமையாக கேரளா போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று
சோதனை செய்ததில் ஹவாலா பணம் கடத்த முயன்றது தெரியவந்தது.கேரளாவைச் சார்ந்த அப்துல் சலாம் மற்றும் மிதுன் குஞ்சு என்ற இரண்டு பேர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வாளையார் செக்போஸ்டில் இருந்த பாலக்காடு கேரளா போலீசார் அவர்களை கைதுசெய்து பாலக்காடு நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்றனர்.அவர்கள் எங்கிருந்து இந்த பணத்தை கடத்தி வந்தனர். யாருக்கு ஒப்படைக்கின்றனர் வேறென்ன சம்பவங்கள் இவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மேலும், அவர்களிடம் இருந்து 1.25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.