• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண்ணின் மொபைலுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது

July 7, 2020 தண்டோரா குழு

கோவையில் பெண்ணின் மொபைல் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கோவை கணபதி பாலாஜி லே-அவுட்டை சேர்ந்தவர் காளிமுத்து 45. இவர் ரத்தினபுரியை சேர்ந்த ஒரு தம்பதியரின் குழந்தைகளை கடந்த 8 ஆண்டுகளாக பள்ளிக்கு தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணிற்கு ஆட்டோ ஓட்டுனரான காளிமுத்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதுகுறித்து, அந்த பெண் காளிமுத்துவிடம் கேட்டபோது அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.பின்னர் இது குறித்து அந்த பெண் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்ணின் புகாரை தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்குப் பின் காளிமுத்துவை கைது செய்தனர்.

மேலும் படிக்க