• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா?

July 7, 2020 தண்டோரா குழு

ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம். மூலிகை மைசூர்பா குறித்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோயமுத்தூர் தொட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல்லை லாலா ஸ்வீட் கடை, கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மூலிகை மைசூர்பா உண்பதன் மூலம் குணமடைய முடியும் என்ற நோட்டீஸ் ஒன்றை அச்சடித்து அப்பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறது. அந்த நோட்டீசில் ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம், இது சின்னியம்பாளையம் மற்றும் வெள்ளலூரில் நிறைவேறி உள்ளது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிற்கு தேடிச்சென்று இலவசமாக வழங்கவும் தயாராக உள்ளோம், மத்திய அரசு விரும்பினால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் இந்த பார்முலாவை எவ்வித பணம் பொருள் எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாக தர தயாராக உள்ளோம், 2020இல் இந்தியா வல்லரசாகும் என்ற மேதகு ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களது கனவு நிறைவேற மற்றும் இறந்த அவரது ஆத்மா சாந்தி அடைய துணை நிற்போம் என்ற வாசகங்கள் அடங்கி உள்ளது.தற்பொழுது அந்த நோட்டீஸானது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்கள் குழு போராடும் நிலையில் இத்தகைய இனிப்பு கடை நோட்டீஸ் ஆனது இப்படிப்பட்ட விளம்பரத்தை பரப்பி வருவது மக்களிடையே குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க