July 7, 2020
தண்டோரா குழு
மஸ்கட்டிலிருந்து இருந்து வரும் சலாம் ஏர் விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் முறையாக தரையிறங்குகிறது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச விமானங்கள் இதுவரை தரையிறங்கியுள்ளன. அந்த வகையில் கடந்த வாரம் ராயல் புருனே ஏர்லைன்ஸ் 139 இந்திய பயணிகளுடன் கோவை வந்தடைந்தது.
இந்நிலையில்,இன்று இரவு 7.45 மணிக்கு ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து வரும் சலாம் ஏர் விமானம்(0V1343) கோவை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குகிறது. ஓமனில் முதல் குறைந்த கட்டண விமானம் சலாம் ஏர் ஆகும். இது மஸ்கட், துபாய் மற்றும் பிற மத்திய கிழக்கு நகரங்களிலிருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.