• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறுஉத்தரவு வரும் வரை நகைக்கடைகள், நகைப்பட்டறை திறப்பதற்கு தடை

July 6, 2020 தண்டோரா குழு

கோவையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இயங்கி வரும் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறை கடைகள் மறுஉத்தரவு வரும் வரை திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் காரணத்தினால் இன்று முதல் (06.07.2020) மாநகராட்சிக்குட்பட்ட சலிவன் வீதி, உப்பார வீதி, தாமஸ் வீதி இடையர் வீதி , சுக்கிரவார் பேட்டை, தெலுங்கு வீதி, செந்திரும்மன் சந்து, மரக்கார நஞ்சப்பாகவுடர் வீதி, சுந்தரம் வீதி, குரும்பர் சந்து, கருப்பகவுண்டர் வீதி, பெரியகடை வீதி, காந்திபார்க் மற்றும் இராஜவ
வீதி ஆகிய பகுதிகளில் இயங்கிவரும்
நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறை கடைகள் மறுஉத்தரவு வரும் வரை திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட பகுதிகளுக்குட்பட்ட நகைக்கடை மற்றும் நகைப்பட்டறை
கடைகளில் பணியாற்றும் நபர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ளவும் அல்லது மாநகராட்சியின் கட்டுப்பாட்டு மைய எண்கள் 1077, 0422-2302323, மற்றும் 9750554321 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க