July 6, 2020
தண்டோரா குழு
கொரோனா பரிசோதனையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கோவையில் செயல்பட்டு வரும் நான்கு பரிசோதனை மையங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம்
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பரிசோதனைகளையும் அதிகரித்தது. தனியார் பரிசோதனை மையங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில், சில தனியார் தனியார் பரிசோதனை மையங்கள் பரிசோதனையில் முறைகேடான லாபம் பார்ப்பதற்காக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த நான்கு தனியார் பரிசோதனை மையங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலும் கொரோனா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், போலி அடையாள அட்டைகளை வைத்து முறைகேடாக கணக்கு காட்டியதாகவும் கோவையில் உள்ள ஆர்பிட்டோ ஏசியா, பயோலைன், மைக்ரோ பயாலஜி, கிருஷ்ணா ஆகிய மையங்களில் கொரோனோ பரிசோதனை அனுமதியை அரசு தடை செய்துள்ளது.