July 6, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அலுவலகம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் கிருமிநாசினிகள் தெரிவிப்பது வாகன விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் தானியங்கி இயந்திரம் மூலம் மாநகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்தனர்.