• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று ஒரேநாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பாதிப்பு என்ணிக்கை 741 ஆக உயர்வு !

July 5, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 741 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோவையில் இன்று 31 ஆண்கள், 16 பெண்கள், 3 குழந்தைகளுக்கு என மொத்தம் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

அதன்படி விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், 21 வயது பெண் மற்றும் 39 வயது பெண், செல்வபுரத்தைச் சேர்ந்த 40 வயது ஆண், கோல்ட்வின்ஸ் பகுதியைச் சேர்ந்த 33 வயது ஆண், பீளமேடு பகுதியைச் சேர்ந்த 78 வயது முதியவர், சித்ரா பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆண், இருகூர் பகுதியைச் சேர்ந்த 78 வயது முதியவர், குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன், புலியகுளம் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 55 வயது ஆண்கள், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் பீளமேடு பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 53 வயது ஆண், காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 40, 23 மற்றும் 57 வயது ஆண்கள், சிங்காநல்லூரரை சேர்ந்த 44 வயது ஆண், காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த 24 வயது ஆண், நேரு நகர் பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆண், கணபதி பகுதியை சேர்ந்த 53 வயது பெண், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 57 வயது ஆண், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 47வயது ஆண், செல்வபுரம் பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த 38 வயது ஆண், பொம்மனாம்பாளஒயம் பகுதியைச் சேர்ந்த 24,53 மற்றும் 53 வயதுடைய பெண் மூவர்,
, சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண், பீளமேடு பகுதியைச் சேர்ந்த 44 வயது ஆண், குனியமுத்தூரை சேர்ந்த 27 வயது பெண் மற்றும் 32 வயது ஆண், சூலூரை சேர்ந்த 35 வயது பெண் மற்றும் 82 வயது முதியவர், தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 27 வயது ஆண், இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயது ஆண், சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது ஆண்,ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது ஆண், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 59 வயது ஆண், சித்ரா பகுதியைச் சேர்ந்த 25 வயது ஆண் மற்றும் 28 வயது ஆண், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயது ஆண், இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 23 வயது ஆண், சூலூரை சேர்ந்த 7 வயது சிறுவன், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது ஆண், புலியகுளம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண், ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 47 வயது பெண் ஆகியோருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவையில் கொரோனாவால் பாதிக்கப்ப்பட்டோர் எண்ணிக்கை 741 ஆக உயர்ந்துள்ளது.

.

மேலும் படிக்க