July 4, 2020
தண்டோரா குழு
புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றாவளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கி அதனை நேரலையில் ஒளிபரப்ப கோரி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் அருகே ஜெயப்ரியா என்ற சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பூ வியாபாரி ராஜா மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்நிலையில் கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக அதன் தலைவர் மனு நீதி சோழன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. மனுவில் புதுக்கோட்டையில் சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாதுகாப்பிற்கு ஒரு கேள்விகுறியை ஏற்படுத்தி உள்ளதாகவும்,இது போன்ற வாழ்வியலுக்கு அச்சுறுத்தலை ஏற படுத்தும் குற்றவாளிகளை தமிழக அரசு முன்மாதிரியாக பாரபட்சமின்றி பொதுமக்கள் முன்னிலையில் கழுவில் ஏற்றி மரண தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடர்ந்து இது போன்று, இனி ஒரு குழந்தை பாதிக்காமல் இருக்க குற்றவாளிகளை தண்டிக்கும் நிகழ்வை பொது வெளியில் அனைவரும் காணும் விதமாக நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தமிழ்நாடு தலைவர் மனு நீதி சோழன் கோரிக்கை விடுத்துள்ளார்.