July 4, 2020
தண்டோரா குழு
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸிற்கு தடுப்புமருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவம் கட்டாயம் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதனால்
கைக்குட்டை, துப்பட்டா, துண்டு என அனைத்தும் முக்கவசங்களாக அவதாரம் எடுத்தன.
இந்நிலையில், புனேவை சேர்ந்த
பணக்காரரான ஷங்கர் தனது முகத்துக்கு ஏற்றவகையில் ஒரு தங்க முக்கவசம் தயாரித்து அதனை அணிந்துள்ளார்.இது மிக மெல்லிதாகவும், சிறு சிறு கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகள் கொண்டதாகவும் இருப்பதால், இதை அணிந்து கொள்ளும் போது
மூச்சு விடுவதில் எந்த சிரமமும் தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும், இது கொரோனா தொற்றில் இருந்து எந்த அளவுக்கு எனக்கு பாதுகாப்புத் தரும் என்று உறுதியாகத் தெரியவில்லை என்றும் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இதன் தங்க மாஸ்கின் மதிப்பு ரூ.2.89 லட்சமாம். தனது உடல் முழுக்க தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு, சிறிய நகைக்கடை போல வலம் வரும் ஷங்கர், முகக்கவசத்தையும் தங்கத்திலேயே செய்து அணிந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.