July 3, 2020
தண்டோரா குழு
கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாகCOVID 19 குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இணையவழி உறுதிமொழி (Online Pledge)ஏற்கும் நிகழ்வை முன்னெடுத்துள்ளது.
இணையவழியில் ஒருமாத கால அளவில் உறுதிமொழியை ஏற்கும் வண்ணம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இணைப்பு (Link) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வினை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் B.L.சிவக்குமார், துணை முதல்வா் முனைவா் S.தீனா, நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.பிரகதீஸ்வரன், பேரா.சுபாஷினி, பேரா.நாகராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.