• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று அரசு மருத்துவர், 2 வயது குழந்தை உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று

July 3, 2020 தண்டோரா குழு

கோவையில் இன்று கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கோவையில் இன்று கோவை அரசு மருத்துவமனை மயக்க மருந்தியியல் துறை மருத்துவர், கோவை சுங்கம் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் டாக்டர், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த காரமடையை சேர்ந்த 50 வயது நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும், ஆர்.எஸ்.புரம் டி.வி சாமி ரோடு, கீரின்பார்க் அபார்ட்மெண்ட், வி.சி.வி லே-அவுட் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கும், உக்கடம் ஹவுசிங்யூனிட், சி.எம்.சி காலனி, தர்மராஜர் கோயில் வீதி பகுதியை சேர்ந்த 4 பேருக்கும், நேரு நகரை சேர்ந்த 2 வயது குழந்தை உள்பட 3 பேருக்கும், கணபதியை சேர்ந்த 46 வயது ஆண், ஒத்தக்கால் மண்டபம் சேர்ந்த 34 வயது ஆண், கஸ்தூரி நாயக்கன்பாளையம் 40 வயது ஆண்,ஆடிஸ் வீதியை சேர்ந்த 54 வயது பெண், காளப்பட்டி சிறுமுருகன் நகரை சேர்ந்த 13 வயது சிறுவன், ராமநாதபுரம் சேர்ந்த 65 வயது ஆண், என்.எஸ்.என்-பாளையம் சேர்ந்த 38 வயது ஆண், பீளமேடு லட்சுமி புரம் சேர்ந்த 33 வயது ஆண், சேரன்மாநகர் உமா மகேஸ்வரி நகரை சேர்ந்த 56 வயது ஆண், ஒண்டிப்புதூர் சேர்ந்த 68 வயது ஆண், இடிக்கரை சேர்ந்த 38 வயது ஆண், சரவணம்பட்டி சேர்ந்த 36 வயது ஆண், நியூ சித்தாபுதூர் சேர்ந்த 32 வயது ஆண், காளப்பட்டி சேர்ந்த 36 வயது, 26 வயது ஆண், சாய்பாபாகாலனியை சேர்ந்த 40 வயது ஆண், பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்த 59 வயது ஆண், சின்னியம்பாளையம் சேர்ந்த 55 வயது ஆண் என மொத்தம் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோர் கோவை இ.எஸ்.ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம் இன்று 252 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, 391 பேர் இ.எஸ்ஐ மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க