• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரின் புதிய காவல் ஆணையர் பெறுப்பேற்பு !

July 3, 2020 தண்டோரா குழு

திருப்பூர் மாநகர் பகுதியின் புதிய காவல் ஆணையராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த சஞ்சய்குமார் பணி மாறுதல் ஆகி வேறு பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து,திருப்பூர் மாநகர் பகுதியின் புதிய காவல் ஆணையராக கார்த்திகேயன் இன்றுபொறுப்பேற்றுக்கொண்டார்

இதற்கு முன்பாக இவர் கோவை சரக டி.ஐ.ஜி ஆக இருந்தார். தற்போது ஐ.ஜி ஆக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்னதாக அவிநாசி பகுதி டிஎஸ்பி ஆகவும் , ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் எஸ்பி பதவியையும் வகித்து வந்த கார்த்திகேயன் தற்பொழுது காவல் ஆணையராக பதவி ஏற்றுள்ளார்.

பதவியேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் கார்த்திகேயன,

திருப்பூர் மாநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் முக்கிய பணியாற்றுவார்கள் என்று கூறினார். இவை தவிர திருப்பூர் மாநகர் பகுதிகளில் மதநல்லிணக்கத்தை பேணுவதற்கும் குற்றச்செயல்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க