July 2, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி
இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் பணியாற்றி வரும் மூன்று ஆண்கள், பீளமேடு, ஸ்ரீ நகரை சேர்ந்த 21 வயது ஆண்,தெலுங்கு பாளையம் தனியார் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் 25, 35 வயது ஆண், இடிகரையை சேர்ந்த 50 வயது பெண், சிங்காநல்லுார் கோத்தகிரி கார்டனை சேர்ந்த 23 வயது ஆண், பி.என்.புதுாரை சேர்ந்த, 73 வயது மூதாட்டி, செல்வபுரம் சரோஜினி நகரை சேர்ந்த 21 வயது பெண், ஜோதிபுரத்தை சேர்ந்த 40 வயது ஆண், கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 45 வயது நபர் என மொத்தம் 13 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம்,கொரோனாவால் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்சமயம், 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.